ஈழ நிலத்தின் போர் திரும்பத்திரும்ப எழுதப்பட்டுக்கொண்டிருந்தாலும் துயர்களைத் தின்று செரித்த நிலத்திடம் சொல்வதற்கு ஏராளம் கதைகள் உண்டு. வரலாறு முழுவதும் ஆக்கிரமிப்புக்களின் போதெல்லாம் விழுவதும் பின் எழுவதுமான வன்னிக்கிராமம் ஒன்றின் கதையிது.
தொல் தெய்வங்களின் கருணையும் உக்கிரமும் உள்ளுறைந்திருக்கும் கதைகளையும் மனிதர்களையும் கொண்டு எழுதப்பட்டிருக்கும் யதார்த்தனின்
முதல் நாவல்

Browse Books

பிரதிகள்

நகுலாத்தை

ஈழ நிலத்தின் போர் திரும்பத்திரும்ப எழுதப்பட்டுக்கொண்டிருந்தாலும் துயர்களைத் தின்று செரித்த நிலத்திடம் சொல்வதற்கு ஏராளம் கதைகள் உண்டு. வரலாறு முழுவதும் ஆக்கிரமிப்புக்களின் போதெல்லாம் விழுவதும் பின் எழுவதுமான வன்னிக்கிராமம் ஒன்றின் கதையிது. தொல்  தெய்வங்களின் கருணையும் உக்கிரமும் உள்ளுறைந்திருக்கும் கதைகளையும் மனிதர்களையும் கொண்டு எழுதப்பட்டிருக்கும் யதார்த்தனின் முதல் நாவல்.

රු3,400.00 රු3,000.00
View Book

மெடூசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம்

போரும் அதுசார்ந்த வாழ்க்கையின் உளவியலும் சந்திக்கும் முரண்களை கதைகளாக்கியிருக்கும் பிரதி. போரின் உள்ளார்ந்த அழிவையும் வாழ்க்கை மீது சரிக்கப்பட்ட துயரையும் இக்கதைகள் எங்கும் காணலாம். இடையறாது நடந்த உள்நாட்டு யுத்தத்திற்குள் பிறந்து பால்ய காலத்தைப் போரிலே கழித்த கதைசொல்லி உருவாக்கும் மனிதர்களும் அவர்களின் வாழ்க்கையும் போரினது அழிவோடு எப்படி மோதிச் சிதைகின்றதை வெளிப்படுத்தக்கூடிய கதைகள் இவை. ஆக்காட்டி வெளியீடாக கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த யதார்த்தனின் முதலாவது கதைத்தொகுப்பு இதுவாகும்

රු3,500.00 රු3,000.00
View Book

”இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் சரசாலை என்ற ஊரில் 1993 பங்குனியில் பிறந்தவர், குணரட்ணம் பிரதீப் என்பது இவருடைய இயற்பெயர். யதார்த்தன் என்ற பெயரில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக எழுத்து மற்றும் சமூக செயற்பாட்டாளாராக இருக்கிறார். விதை குழுமம் என்ற சமூகசெயற்பாட்டு அமைப்பில் செயற்பட்டுவருகின்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் இளமானிப்பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்கிறார். தற்பொழுது பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் முதுமானிப்பட்டப்படிப்பைத் தொடர்ந்துவருகின்றார். விதை குழுமம் முன்னெடுக்கும் மரபுரிமைகளைப் பாதுகாக்கும் செயற்பாடான “தொன்ம யாத்திரை” இதழின் ஆசிரியர்களில் ஒருவராக இருந்துவருகின்றார். மரபுரிமைகள், சாதியம், மற்றும் சமகாலப்பிரச்சினைகள் தொடர்பில் தமிழில் வெளியாகும் சஞ்சிகைகள், பத்திரிகைகள் இணைய இதழ்களில் எழுதிவருகிறார். இவருடைய முதலாவது கதைத்தொகுப்பு மெடூசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம் என்ற பெயரில் 2017 ஆம் ஆண்டு ஆக்காட்டியினால் வெளியிடப்பட்டது. இவருடைய முதல் நாவலான ‘நகுலாத்தை’ 2022 இல் வடலி பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டது. இத்தளத்தில் யதார்த்தனின் கதைகள், கட்டுரைகள், பத்திகள் மற்றும் ஏனைய எழுத்துக்களை வாசிக்கவும், புத்தகங்களை வாங்கவும் முடியும்.”

வணக்கம்..
yatharthan.com
https://yatharthan.com/storage/2023/07/Yatharthan.-com-1-500x600.jpg

நகுலாத்தை பற்றி

රු3,400.00 රු3,000.00
//yatharthan.com/storage/2023/07/Yatharthan-@akkenum.co_-3.png

இருட்டில் குளம் இராட்சதக் குணத்துடன் காதை இரைக்கும்படி சீறிக்கொண்டு பாய்ந்து ஊருக்குள் இறங்கியது. தாமரை வேகமாக குளக்கட்டில் ஏறி ஓடத்தொடங்கினாள். உடல் நடுங்கியது. கால்கள் தடுமாறவதை அறிவில் கொண்டுசேர்க்க போதிய குருதி உடலிலிருக்கவில்லை. ஏழு மருதடியை நெருங்க முதல் வீழ்ந்தாள். அப்படியே குளக்கட்டில் வழுக்கியது உடல். மழையின் சத்தம் வறண்டது. துவக்குச் சத்தங்கள் காதுக்குத் தூரமாகப் போயின. வைகாசிக் கிழவரின் கொட்டுப் பறை மெல்ல செவிச் சுரணையில் இருந்து அகன்றுபோனது. எல்லாச் சத்தமுமம் அடங்க எங்கும் நீரின் குரல்

யதார்த்தன்